கைலாசநாதர் கோவில் 14 ஆண்டுகளாக அன்பர் பணி செய்யும் குழு என ஒன்றை ஆரம்பித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதிப் தலைவராக இயங்கி வந்தார்மேலும் கடந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் கோவிலில் அனைத்து அதிகாரமும் அவரே முன்னின்று செய்து வந்தார்
இந்நிலையில் தற்பொழுது கைலாசநாதர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை இ ஓ திருமதி ராமதிலகம் அவருடைய மேற்பார்வையில் நடந்து வந்தது கார்த்திகை திருநாளில் எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய இளைய மகன் ஜெயா பிரதீப் கோவில் திருவிழாவுக்கான அழைப்புகள் தன்னிச்சையாக அடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
கைலாசநாதர் கார்த்திகை தீபம்ஏற்றும் நிகழ்வுக்கு வருகை தந்த இரண்டு முறை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே எஸ் சரவணகுமார் அவர்கள்முன்பாக அரசினுடைய இந்து அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்ட ஆலயத்தில் எவ்வித அரசு குறிப்பிடும் இல்லாத ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய மகன் ஜெயபிரதீப் ஓ .ராஜாவின் மகன் முத்துக்குகன் ஆகியோருக்கு கோவில் பரிவட்டம் கட்டியும் முதல் மரியாதை செய்து தீபம் ஏற்றும் விலக்குடன் வருகை தந்தார்.
அங்கிருந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் இந்து அறநிலையத்துறையின் அதிகாரியான திருமதி இராம திலகம் அவர்கள் விளக்கை ஏற்றுங்கள் என கோரிக்கை வைத்தார் இதை சற்றும் கேட்காமல் கோவில் தீட்சிதர் ராஜா பட்டர் அவர்கள் உள்நோக்கத்துடன் ஜெயபிரதீப் கொண்டு வந்த விளக்கை வைத்து தீபத்தை ஏற்ற முயற்சித்தார் அதை சற்றும் எதிர்பாராத பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் அரசு விதிமுறைப்படி நடந்து கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது ஜெயபிரதீப் உடன் வந்த அனைவரும் நாங்கள்தான் ஏற்றுவோம் என்று கூச்சல் போடப் பட்டதால் அங்கிருந்து பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் வெளியேறினார்.
பின்பு ஜெய பிரதீப் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் தனது ஆதரவுகளுடன் கலந்து கொண்டார் எவ்வித அரசு பொறுப்பிலும் இல்லாத ஜெயப்பிரதீபின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை சாதிய வன்மத்துடன் திட்டமிட்டு இழிவுபடுத்தியது தவறு என பொதுமக்களும் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.
கைலாசநாதர் கோவிலில் நடைபெற்ற சம்பவம் சமூக நீதிக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவம் என்பதால் பெரும் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் க.வி. முரளிதரன் அவர்களிடம் புகார் மனுவை கொடுத்தார், அந்த மனுவில் தவறு செய்த நபர்கள் மீதும், சமூக நீதிக்கு களங்கம் ஏற்படுத்திய நபர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
No comments:
Post a Comment