அருள்மிகு ஸ்ரீ மலைமேல்கைலாசநாதர் சுவாமிகளை தரிசிக்க தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு கிராமங்களில் பக்தர்களும் பொதுமக்களும் வருகை தந்து அருள் பெற்று செல்வது வழக்கம் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இன்று திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார் ஆகியோர ஏற்பாட்டின் பெயரில்பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதான நிகழ்ச்சி துவக்கி வைத்து பக்தர்களோடு அமர்ந்து உணவருந்தினார்.
அதே சமயம் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக பெரியகுளம் கைலாசநாதர் ஆலயத்தில் ஏற்றும் தீபம் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் பொழுது பெரியகுளம் நகர செயலாளர் கே முகமது இலியாஸ். மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன் அய்யப்பன். நகர துணை செயலாளர் எம். சேதுராமன். தென்கரை பேருராட்சி சேர்மன் நாகராஜ். தென்கரை பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- தேனி செய்தியாளர் எம். சேதுராமன்.
No comments:
Post a Comment