அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோவிலில், மகா கார்த்திகை தீபம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 December 2022

அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோவிலில், மகா கார்த்திகை தீபம்.

 

பெரியகுளம் அருகே, அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோவிலில், மகா கார்த்திகை தீபம் 500 கிலோ எடைநெய் கொண்ட அகன்ற நெய்தீப கொப்பரையில் கோவில் பூசாரி மகா கார்த்திகை தீபம் ஏற்றினர், இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கைலாசபட்டி பகுதியில் மலைமேல் கைலாசநாதர் உடனுறை பெரியநாயகி திருக்கோவில் அமைந்துள்ளது சிவபெருமானின் வழிபாட்டுத்தலம் என்பதாலும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்ததாக இப்பகுதி சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இக் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று, திருவண்ணாமலை கிரிவலம் போன்று கைலாசநாதர் கோவிலில் கிரிவலம் செல்வது சிவனின் அருளாசி கிடைக்கும் என்பது பக்தர்கள் ஐதீகமாகும். கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் நந்திகேஸ்வரர்க்கு சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்டம், மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.


மேலும், தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காக 500 கிலோ எடையுள்ள நெய்க் கொப்பரையில் பக்தர்களால் நெய் ஊற்றப்படுகிறது. இன்று மாலை சுமார் 6.30 மணி அளவில்அருள்மிகு கைலாசநாதர் கோவில்லில் கோவில் பூசாரி மகா கார்த்திகை தீபத்தை ஏற்றினார்.


மகாகார்த்திகை தீப நாளையொட்டி சொக்கப்பனை, கொழுத்தப்பட்டது. திருவிழாவினையொட்டி காலை முதல் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு காலை முதல் திமுக மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் தலைமையில் அன்னதானம் வழங்கினர்.


பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசுப் பேருந்துகள் தேனி மற்றும், பெரியகுளத்திலிருந்து இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தேனி மாவட்டம் காவல்துறை  சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு இருந்தது   காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். மகரகார்த்திகை தீபத்தை ஏற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இந்நிலையில் கைலாசநாதர் திருக்கோவிலில் வருட வருடம்  அன்பர் பணிக்குழுவின் சார்பில் கோவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம் ஆனால் தற்போது கைலாசநாதர் கோவில் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத்தை இந்து அறநிலைத்துறை அலுவலர் ராமத்திலகம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை வந்ததால்   கோவில் பூசாரி மகா கார்த்திகை தீபத்தை ஏற்றினார்.


இதுவரையிலும் கடந்த 14 ஆண்டுகளாக அன்பர் பணிக்குழு என்று ஒரு குழு அமைத்து அதன் மூலம்   மலைமேல் கைலாசநாதர் திருக்கோவில் கார்த்திகை தீபத்தை வருட வருடம் ஏற்றுவது வழக்கமாகக் கொண்டிருந்தன, அதன்படி தற்போது  கோவில் பூசாரி மகா கார்த்திகை தீபத்தை ஏற்றினார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன். பெரியகுளம் நகர செயலாளர் முகமது இல்யாஸ், துணைச்செயலாளர் எம்.சேதுராமன். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ்-தாமரைகுளம் பேருராட்சி தலைவர் பால்பாண்டி. அன்பர் பணிக்குழு தலைவர் ஜெயபிரதீப் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


பின்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துசாமி தரிசனம் செய்தார்

No comments:

Post a Comment

Post Top Ad