தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாம்பாறு கரையில் சுயம்பு வடிவில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட அபிஷேகம் செய்து மூலவர் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரமும், உற்சவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தேங்காய் அலங்காரம், செய்யப்பட்டு அனுமனுக்கு வட மாலை மற்றும் துளசி மாலை சாற்றியும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் பெரியகுளம் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment