தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. கே .பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவீரன் தலைமையில் இபிஎஸ் அணி பெரியகுளம் ஒன்றிய செயலாளரும், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான அன்ன பிரகாஷ், பெரியகுளம் நகர பொறுப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் பெரியகுளம் அரண்மனை தெருப்பகுதியில் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் அவர்களின் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் இபிஎஸ் ஆதரவாளர்கள் வெங்கடேஷ், பவுன்ராஜ், செந்தில்குமார், சுரேஷ், பெருமாள், இலக்கியன், ராம்ஜி, நாகராஜ், பாலகிருஷ்ணன், காமு, பார்வதி, முத்துலட்சுமி, கிருஷ்ணகுமாரி, கருப்பாயி உள்ளிட்ட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment