ஒவ்வொரு கண்மாய்க்கும் 50 முதல் 100க்கும் மேற்பட்டோர் ஏலம் எடுக்க விண்ணப்பித்து இருந்தனர். ஏலம் எடுக்க வந்த ஏலதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் வைகை அணையில் குவிந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினார். இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். முதலில் பெரியகுளம் அருகே உள்ள வடகரை வேலன்குளம் கண்மாய் ஏலம் நடைபெற்றது . ஏலம் உள்ள ஆரம்பிக்கப்பட்டு துவங்கிய சமயத்தில் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக கூட்டத்தை விளக்கிவிட்டு தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். இதனால் வைகைஅணை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகமே போர்க்களமாக காட்சியளித்தது. மேலும் முதலில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேர்களை பிடித்து தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் கண்மாய் ஏலத்திலேயே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
இதையடுத்து மீன்வளத்துறை அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேவும் கூடி இருந்தவர்களை உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினார்கள். ஆண்டிபட்டி போலீசாரின் துரித முயற்சியால் மிகப்பெரும் மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment