வட்டார அளவில் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

வட்டார அளவில் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி.


வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் தேனி நேரு யுவகேந்திரா பாரதம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வாலிபால், கபடிபோட்டி 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, இதில்  விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டது, இதில் க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர் ஆயுதவள்ளி மணிமாறன் முன்னிலை வகித்தார், வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்எஸ் மாடசாமி,நேரு யுவகேந்திரா தேனி துணை இயக்குனர் செந்தில்குமார், பாரத இளைஞர் நற்பணி மன்ற திவாகரன், சுவேதா, கனீஸ்வரி விளையாட்டு அமைப்பு இளைஞர்களின் சட்ட ஆலோசகர் வருசநாடு சரவணன், சமூக ஆர்வலர் சுந்தரம், ஆகியோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதற்கான முழு ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.


மேலும் நன்றியுரை வார்டு உறுப்பினர் வாஞ்சிநாதன், திமுக பிரமுகர்கள் ஜெயச்சந்திரன் ஆனந்தன் சேரன் அண்ணாநிதி மற்றும் அனைத்து பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்டனர். இதுகுறித்து பாரத இளைஞர் நற்பணி மன்றம் திவாகரன், கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் களை  ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தேனி மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறும் குறிப்பாக ஒவ்வொரு ஒன்றியம் வாரியாகவும் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம் இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் இந்த போட்டியில் நடைபெற்றது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad