தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் கோ. சீதையம்மாள் நினைவு சுழல் கோப்பை 33-வது ஆண்டு மாநில அளவிலான லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது, முதல் இரண்டாவது இடத்திற்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை அணியினரும் பொள்ளாச்சி எஸ் டி சி அணியினரும் மோதியதில் தமிழ்நாடு காவல்துறை அணி (34 க்கு 32). (25 க்கு 16), (25க்கு21) புள்ளிகள் பெற்று 3. 0 என்ற நேர் செட் கணக்கில் புள்ளிகள் பெற்றது.
இந்நிலையில் முதல் இடத்தை பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிக்கு கோ. சீதையம்மாள் நினைவு சுழற் கோப்பை மற்றும் பி.டி. சிதம்பர சூரிய நாராயணன் நினைவு பரிசு ரூபாய் 25.005 ம். இதனைத் தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி எஸ் டி சி அணியினருக்கு எல் எஸ் மில் லிமிடெட் சுழற் கோப்பை மற்றும் ரூபாய் 20.005 பரிசு வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை பிடித்த சென்னை வைஷ்ணவா கல்லூரி அணிக்கு ஆண்டியப்பன் மற்றும் குமரேசன் என்ற குணா அவர்களால் .பரிசு. ரூபாய் 15.005ம் வழங்கப்பட்டது, நான்காம் இடத்தை பிடித்த சென் ஜோசப் அணியினரும் தனபால் செட்டியார் அண்ட் சன்ஸ் சார்பாக பரிசு ரூபாய் 10,000 வழங்கப்பட்ட ஐந்தாவது இடத்தைப் பிடித்த விளையாட்டு விடுதி மேம்பாட்டு ஆணையம் சென்னை அணிக்கு ஜெயராமன் அவர்களால் பரிசு ரூபாய் 8OO1 பரிசு வழங்கப்பட்டது
மேலும் இளம் விளையாட்டு வீரர்களுக்கான விருதை எஸ் டி சி பொள்ளாச்சி அணியை சேர்ந்த கபிலனுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து தொடர் நாயகன் விருதை தமிழ்நாடு காவல்துறை அணியைச் சேர்ந்த பார்த்திபனுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது, மேலும் முன்னதாக மகளிர்கான போட்டியில் வடுகபட்டி இளைஞர் விளையாட்டு கழகம் அணியும் சின்னமனூர் கணக்கு வேலாயிம்மாள் மேல்நிலைப்பள்ளி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சின்னமனூர் கணக்கு வேலாயி அம்மாள் அணியினர் வெற்றி பெற்று பரிசை தட்டி சென்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சி.செல்வராஜ் தலைமையிலான குழுவினர் துணை செயலாளர் Dr சி பார்த்திபன் (தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழகம்) வி ரங்கநாதன், துணைத் தலைவர், சி.உதயகுமார், ஆர் மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் எம். செல்வ குமார் பாண்டியன், தங்கவேல் பாண்டியன், தாமரைச்செல்வன், மணிகண்டன், வீரபத்திரன், பிரகாஷ், சுந்தரம், மன்னார், வைரமுத்து செல்வம், ரமேஷ் குமார், சந்திரசேகரன் குணா என்ற குமரேசன். செந்தில் மாயன் கணேஷ்குமார் பாஸ்கரன் ஆகியோர் கைப்பந்தாட்ட போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மேலும் கடந்த 1979 ஆண்டு ஆறம்பிக்க பட்டு கைப்பந்தாட்ட போட்டியானது முதலில் ஒன்றிய அளவிலான போட்டிகள் மட்டுமே நடைபெற்றது இதனை தொடர்ந்து ஒருங்கினைந்த மதுரை மாவட்ட அளவிளான போட்டிகள் நடை பெற்றது பின்பு தமிழ் நாடு மாநில கைப்பந்தாட்ட கழகத்தின் அங்கீகாரத்துடன் தொடர்ந்து 33 ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகள் வடுகப்பட்டியில் மருத்துவர் சி.செல்வராஜ் அவர்களின் தாயார் கோ, சீதையம்மாள் நினைவாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தமிழர்களின் திருநாளாம் தை திருநாளில் வடுகபட்டியில் இருந்து வெளியூர்களில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள் அனைவரும் சொந்த ஊரான வடுகபட்டியில் ஒன்றிணைந்து விடுமுறை நாட்களில் இந்த கைப்பந்தாட்ட போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது மட்டுமல்லாது இதுவரையிலும் மாவட்ட மாநில அளவிலான கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கியது வடுகபட்டிக்கு பெருமை சேர்த்துள்ளனர் இளைஞர் விளையாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு கைப்பந்தாட்ட வீரர்களை உருவாகி இருப்பதும் இனிவரும் காலங்களில் இனியும் பல இளம் வீரர்களை இளைஞர் விளையாட்டு கழகம் குழுவினர் உருவாக்குவார்கள் என்பதே உண்மையாய் உள்ளது.
மேலும் வடுகபட்டி பகுதியில் கைப்பந்தாட்ட பயிற்சிக் நடைபெறுவதற்காகவே ஏழு மைதானங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதும் கைப்பந்தாட்ட கழகத்துடன் பதிவு பெற்று இன்னும் மூன்று விளையாட்டு கழகம் செயல் பட்டு வருகின்றது மேலும் இதே போல் கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு கூடைப்பந்தாட்ட வீரர்களும் இளைஞர் விளையாட்டுக் கழகத்தில் சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடுகபட்டி மண்ணில் விளையாட்டு வீரர்களை உருவாக்கியது மட்டுமல்லாது மண்ணின் மைந்தன் கவிஞர் வைரமுத்து அவர்களை உருவாக்கிய பெருமைக்குரிய வடுகபட்டி ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment