ஆண்டிப்பட்டியில் ஆயிரம் பேர் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 14 January 2023

ஆண்டிப்பட்டியில் ஆயிரம் பேர் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.


ஆயிரம் பேர் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் வைத்து, கல்லூரிப் பெண்கள்  கண்களை கட்டி  உரி  அடிப்போட்டியில்  குதூகலத்துடன் பங்கேற்ற பொங்கல் விழா.

 

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரச நாயக்கனூர்  பாரத்நிகேதன் தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி  மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஆயிரம் பேர்கள் இணைந்து பங்கேற்ற பொங்கல்விழா நடைபெற்றது . புழக்கத்தில் குறைந்துவரும்   பாரம்பரிய  வேட்டி சேலைகளை பழக்கத்தில் கொண்டுவரும் வண்ணம் அனைவரும் வேட்டி சேலைகளை அணிந்திருந்தனர் .  


கல்லூரிப் பெண்கள்  தலைகளில்  பொங்கல் வைத்த  பானைகளை சுமந்துவர,  அவர்களை பேண்டு வாத்தியத்துடன் ஒலிஎழுப்பி ஆட்டம் ஆடி வரவேற்று அழைத்து வந்தனர்  கல்லூரி காளையர்கள். 


இதையடுத்து கல்லூரி பெண்களின் கண்களைக்கட்டி அவர்களது மதி நுட்பத்திறனை ஆராய்ந்து அறியும் வண்ணம் நடைபெற்ற உறியடிப்போட்டியில் பலர்  பங்கேற்றது பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. 


இதையடுத்து பொங்கலோ பொங்கல் என உற்சாகமாய் குரலொழுப்பி கல்லூரி மாணவ  மாணவிர்  பொங்கல் கொண்டாடிய  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் .

No comments:

Post a Comment

Post Top Ad