இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ் புலிகள் கட்சி தேனி மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் பாலா என்ற தமிழரசு தலைமையில் நடைபெற்றது .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் புலிகள் கட்சி மாநில அமைப்பு துணைச் செயலாளர் தேனி தமிழரசி, முன்னாள் மாநில நிர்வாகி தலித்ராயன் கலந்து கொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். பெரியகுளம் ஒன்றிய இளம்புலிகள் அணி செயலாளர் மணிகண்டன், தேனி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மாரி பிரபா தமிழ் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தேனி கிழக்கு மாவட்ட நிதி செயலாளர் மதுரை வீரன், தேனி மாவட்ட இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் ராமர் வேல், பெரியகுளம் இளம்புலிகள் ராஜ், ரஜினி முத்து ,மணிகண்டன், தமிழரசன், தமிழ், செல்வா, உதயா ஆகிய நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment