இபிஎஸ் மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்- புகழேந்தி பேட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 January 2023

இபிஎஸ் மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்- புகழேந்தி பேட்டி.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  அதிமுக கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி  கூறுகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர்.

 

அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. இதுஎன்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவது.‌ இந்திய தேர்தல் ஆணையத்தின்  அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின்  அடிப்படையில் ஐந்து   ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோர் தான்  தொடர்கின்றனர்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை  கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர், என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு அனுப்பியது முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலின் காரணமாகவே திண்டுக்கல் சீனிவாசன்  பொருளாளராக தொடர்ந்தால் அதிமுகவில் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது. சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தான் விடுவார்கள். 


சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என சொல்பவர்கள் யாராவது அவரது காலில் விழாமல் இருந்திருக்கிறார்களா. அவரது காலில் விழந்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி  முதலமைச்சராக  முடிந்தது.  சசிகலாவை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு தகுதி கிடையாது. 


பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என முதலில் அரசுக்கு கோரிக்கை விடுத்தது  ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்ததால் தான் ஸ்டாலின் செயல்படுத்தினார் என்பது ஏற்புடையது அல்ல.  எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கைக்கு இது வரை முதலமைச்சர் எவ்வித செவியும் சாய்க்கவில்லை.


இறுதியாக தற்போது கூட எடப்பாடி பழனிச்சாமி மண்ணிப்பு கடிதம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை  ஏற்றுக்கொள்ளட்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். விருப்பமாகும் என தெரிவித்தார். திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன், கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷேக் அகமது, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராஜகோபால் - தேனி மாவட்ட துணைத்தலைவர் குணமுத்து. எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி அரிசிக்கடை முத்து. உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad