இந்த நிகழ்வில், போடி நாயக்கனூர் நகர செயலாளர் பழனிராஜ், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செல்த்தினார்கள். கட்டபொம்மன் சிலைக்கு போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியர் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக (இபிஎஸ் அணி) சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி, போடி நகர பொறுப்பாளர் சேது, உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் நகர செயலாளர் பருஷோத்தமன் போடி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருமாள், மற்றும் நாயுடு நாயக்கர் மத்திய சங்க நிர்வாகிகள் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment