தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைக்கு நோய் கண்டறிதல் முகாம் தென்கரை 1வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கால்நடை மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை பரிசோதனைகளை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தென்கரை பேரூராட்சி உட்பட்ட 1வது வார்டு கவுன்சிலர் குமரேசன் செய்திருந்தார்.
இந்த நிகழ்வில், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், கால்நடை மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment