இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான ரூ 1000 ரொக்கம், பொங்கல் கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்கள். இதில் திராவிட முன்னேற்றக் கழக பெரியகுளம் அவைத்தலைவர் வெங்கடாசலம் நகர துணைச்செயலாளர் எம்.சேதுராமன், நகர பொருளாளர் சுந்தரபாண்டி, நகர துணைச் செயலாளர் சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் சுதா நாகலிங்கம், கிஷோர் பானு நூர் முகமது, பிரியங்காராஜ்குமார், லட்சுமி, நாகபாண்டி மகேந்திரன், அப்துல்மஜீத், வைகைசரவணன், முகமதுஅலி, ரூபினி உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகிகள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பெருமாள் கோவில் அருகில் உள்ள ஏ.485 கூட்டுறவு பண்டக சாலையில், தமிழக அரசுஅறிவித்துள்ள படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க தலைவர் துரைப்பாண்டி தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலை வகித்தார்.
No comments:
Post a Comment