இந்த ரயில் போக்குவரத்து மதுரையில் இருந்து தேனி வழியாக போடிக்கு மீட்டர் கேஜ் ரயில் மட்டுமே விடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது இந்த ரயில் போக்குவரத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததால் கடந்த சுமார்15 ஆண்டுகளுக்கு முன்பாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் அனைத்தும் மிக தாமதமாக நடைபெற்று வந்தது இந்த பணியினை விரைந்து முடிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் நடத்தினார்கள் இதனால் சிறு சிறு தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது.
தேனி மக்களவைத் தொகுதியில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் புதல்வர் ஓ. பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்று எம்பி யாக தேர்வானார், இதன் மூலமாக மக்களவையில் தேனி மாவட்டத்தின் மிக முக்கிய தேவையான அகல ரயில் பாதையை உடனடியாக பணிகளைத் தொடங்கி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு அதன் மூலமாக முழுமையான தொகை ஒதுக்கீடு செய்து பணிகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் நடைபெற்றது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவீந்திரநாத் அவர்களது சீரிய முயற்சியால் மதுரையில் இருந்து தேனி வரைக்கும் அகல ரயில் பாதை மூலமாக ரயில் போக்குவரத்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது தற்பொழுது மீண்டும் தேனில் இருந்து போடி வரை அகல ரயில் பாதை பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து போடி வரை நீடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பல ஆண்டுகளாக தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்த்த அகல ரயில் பாதை மூலமாக ரயில் சேவை தற்பொழுது தேனி மாவட்ட மக்களுக்கு முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த பணியினை விரைவாக முடிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தேனி மக்களவை உறுப்பினர் மாண்புமிகு ஓ .பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வியாபாரிகளும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்
மேலும் மக்களுடைய தேவையை முழுமையாக அறிந்து தெரிந்து ரயில் சேவையை முழுமையாக தேனி மாவட்ட மக்களுக்காக சிறப்பான பணியை செய்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ .பி .ரவீந்திரநாத் அவர்களுக்கு பெரியகுளம் நகர்மன்ற அதிமுக குழு தலைவர் ஓ. சமூகசுந்தரம் அவர்கள் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதே போல அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப தேனிமாவட்ட துணைத் தலைவர் குணமுத்து ஒ.பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த ஓ. பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன .
No comments:
Post a Comment