திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 January 2023

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் அரண்மனை தெரு வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார்.வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட அவை தலைவர் செல்ல பாண்டியன், ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், மாநில உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் மூக்கையா,உறுப்பினர் சரவணகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் செங்கை தாமஸ்,ஆவடி அமுதநேசன், தாமரைக்குளம் சேர்மன் பால்பாண்டி, தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ், மீனவரணி மாவட்ட அமைப்பாளர் முருகன், கூட்டுறவு சங்க தலைவர் துரைப்பாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் நகர நிர்வாகிகள் வெங்கடாசலம் சரவணன், சேதுராமன் வாசுகி, சுந்தரபாண்டியன், ராஜபாண்டி, செந்தில்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வைகை சரவணன், முகமது அலி, லட்சுமி, சுதா நாகலிங்கம், பிரியங்காராஜ்குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் திமுக கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad