தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 96 நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகள் வழங்கினார்.
நிகழ்வில், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணா, பெரியகுளம் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர துணை செயலாளர் சேதுராமன், நகர பொருளாளர் சுந்தரபாண்டி, மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, நகர் மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சந்திரா, சத்யா, கிஷோர் பானு நூர் முகமது, சாஹிரா பானு, லட்சுமி, பவானி, கிருஷ்ணவேணி, முகமது அலி, அப்துல் மஜித், குமரன், ரூபினி, மதன்குமார், சுதா நாகலிங்கம், நாகபாண்டி, பெரியகுளம் நகராட்சி மேலாளர் கோவிந்தன், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர், மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment