தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் பி நாயுடு தெரு பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் 40 வயது ரம்ஜான்பேகம் (33) வயது இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேடசந்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான துணிநுட்ப ஆலையில் வேலை பார்த்து வந்த பொழுது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாகமாரி திருமணத்தில் முடிந்தது தற்போது 13 வயதில் அமில பானு என்ற பெண் குழந்தையும் 08 வயதில் அம்ரின் என்ற பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் அதே பகுதியில் உள்ள தனியர் நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
மேலும் அபூபக்கர் சித்திக் பெரியகுளத்தில் விஆர்பி நாயுடு தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார் அதே பகுதியில் உள்ள வடக்கு பாரஸ்ட் ரோடு பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அபூபக்கர் சித்திக்கும் அவரது மனைவி ரம்ஜான் பேகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அப்பகுதியில் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய முன் தினம் அபூபக்கர் சித்திக் அவரது மனைவி ரம்ஜான் பேகத்திற்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் ரம்ஜான் பேகத்தை அபூபக்கர் சித்திக் அவரது கடை முன்பு பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக கூறப்படுகிறது, இதனைத் தொடர்ந்து இரவு ரம்ஜான் பேகம் திடீரென உயிர் இழக்கவே அபூபக்கர் சித்திக் தனது மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக உறவினருக்கு தகவல் கூறி எல்லோரையும் வரவழைத்து அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் ரம்ஜான் பேகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் பரபரப்பு நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து இத்தகவலை அறிந்த பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு இறந்த ரம்ஜான் பேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பெரியகுளம் காவல்துறையினர் அபூபக்கர் சித்திக் கை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று ரம்ஜான் பேகத்தின் இறப்பு, இயற்கை மரணமா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த நிலையில் ரம்ஜான் பேகத்தின் இறப்பு குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் கோகுல் கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் ரம்ஜான் பேகம் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி வலுக்கட்டாயமாக இறக்க செய்துள்ளார் என்ற அறிக்கையை காவல்துறையினருக்கு சமர்ப்பித்ததை தொடர்ந்து பெரியகுளம் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர், அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் இடம் துரிதவிசாரணையில் ஈடுபட்டபோது நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ளஅவரது உறவினர் மௌலானா என்பவர் வீட்டில் விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
இன்நிலையில் தனது உறவினரின் வீட்டில் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு நீங்கள் இங்கு இருங்கள் மேலும் ஒரு விசேஷ வீட்டிற்குசெல்ல வேண்டி உள்ளது நான்போய் விட்டு மீண்டும் வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன் என்று இரண்டு மகள்களிடம் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்ட அபூபக்கர் சித்திக் என்ற வடிவேலு விசேஷ வீட்டிற்கு செல்லாமல் தனது வீட்டிற்கே வந்துள்ளார் அப்போது தனது மனைவி ரம்ஜான் பேகத்திடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்பொழுது அபூபக்கர் சித்திக்கின் தாய் பாத்திமா 70 வயது என்பவர் வீட்டில் இருந்துள்ளார் இவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டதை பார்த்து பொறுமை இழந்து வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அபூபக்கர் சித்திக் ரம்ஜான் பேகத்த்தின் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி எனது மனைவி ரம்ஜான் பேகத்தை கொலை செய்தேன் என்று கூறியதும் கொலையை மறைக்க நாடகமாடிய சம்பவம் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் இறந்த ரம்ஜான் பேகத்தின் உடலை காவல்துறையினர் ஒப்படைத்து நல்லடக்கம் செய்தனர் மேலும் ரம்ஜான் பேகத்தை கொலை செய்த கணவன் அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் மீது பல்வேறு குற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
15 ஆண்டுகளுக்கு முன்புஅபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் ரம்ஜான் பேகத்தை உயிருக்கு உயிராக காதலித்து காதலிக்காக தனது இந்து மதத்தை விட்டு காதலியின் முஸ்லிம் மதத்திற்கு மாறி கலப்புத் திருமணம் செய்து கொண்டு அழகான இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகி குடும்பத்தை நல்வழியில் நடத்தி வந்த நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நடத்தி வருகின்ற மளிகை கடைக்கு வருகின்ற ஒரு சில பெண்களிடம் தகாத உறவுவைத்ததை தட்டி கேட்ட தனது மனைவி ரம்ஜான் பேகத்திடம் பல முறை தகராறில் ஈடுபட்டு தாக்கியதும் இதனால் இருவருக்கும் இடையேகருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும் தன் காதல் மனைவி மீது கொண்ட வெறுப்பாள் காதல் மனைவியின் உறவை தூக்கி எறிந்து ரம்ஜான் பேகத்தை கொலை செய்து நாடகமாடி இருப்பது பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்பலசரக்கு கடை நடத்தி வந்த அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் தவறான வழியில் பல்வேறு பெண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டு பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறிஒரு சில இச்சைக்கு உட்படுத்தி தன் வசப்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் தனது வறுமையை கூறுவது போல் ஏமாற்றி ஆரம்பத்தில் கடனாக பணம் பெறுவது போல் பல லட்சம் ரூபாய் பெற்று பல பெண்களை ஏமாற்றி பல குடும்ப பெண்களை சீரழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரம்ஜான் பேகம் உயிரிழப்பிற்கு காரணமான ஒரு சில பெண்களிடம் பெரிய குளம் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களையும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே பெரியகுளம் பகுதி தாய்மார்கள் மகளிர் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாய் உள்ளது.
காதலுக்காக எத்தனையோ காதல் ஜோடிகள் உயிரிழந்து தன் காதலை நிரூபித்து உள்ள நிலையில் தன் காதல் மனைவியை பாதுகாத்துப் போற்ற வேண்டிய கணவனே காதலை மறந்து கொலை செய்திருப்பது அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment