இறுதி நாள் போட்டிகளை பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகர்மன்ற தலைவர்சுமிதா சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், தேனி மாவட்ட கூடைப்பந்து கழக பொருளாளர் டாக்டர் பிரபு, மெஜிரா கோட்ஸ் முன்னாள் விளையாட்டு வீரர் பிரபாகர், பெரியகுளம் விளையாட்டுக் கழக தலைவர் மணி கார்த்திக், வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜவேலு,நகர் நலச் சங்க தலைவர் விஜயகுமார், நகர் நலச் சங்க செயலாளர் அன்புக்கரசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தினர்.
லீக் சுற்று களில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் தேனி எல். எஸ். மில் அணி 66 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 58 புள்ளிகள் எடுத்த வடுகபட்டி அணியினை வென்று மூன்றாவது இடத்தினை பிடித்தது. அதனை அடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் போடி அணி 84 புள்ளிகள் எடுத்து எதிர்த்து ஆடி 77 புள்ளிகள் எடுத்த திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து கழக அணியினை வென்று முதல் இடத்தை பெற்றது. ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் விளையாட்டு போட்டிகளை கண்டு களித்தனர். விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் சுப்புராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment