பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டி மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டுதேனி மாவட்டம் மாற்று அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கைலாசநாதர் இருக்கும் நந்திகேஸ்வரருக்கும் 9 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.


நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் வருமான ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஓபிஎஸ் அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.


கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்பர் பணி குழு மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அன்பர் பணி குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad