கெங்குவார்பட்டியில் இருவெவ்வேறு தரப்பினுடைய மோதல் ஒருவர் கொலை மற்ற இருவர் படுகாயம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

கெங்குவார்பட்டியில் இருவெவ்வேறு தரப்பினுடைய மோதல் ஒருவர் கொலை மற்ற இருவர் படுகாயம்.


பெரியகுளம் அருகே இருவெவ்வேறு தரப்பினுடைய மோதல் ஒருவர் கொலை மற்ற இருவர் படுகாயம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி கெங்குவார்பட்டியில் பதட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார் பட்டி பகுதியில் விவசாய தென்ம்  தோப்பில் இரு வெவ்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வெண்டி முத்தையா மகன் ஜெகதீஸ்வரன் 27 வயது  என்பவரை அரிவாள் மற்றும் உருட்டு கட்டையா தாக்கியதக கூறப்படுகிறது இந்நிலையில் சம்பவ இடத்தில் பலி  உடன் இருந்த  செல்வம் மகன் வினோத் குமார்  32. மற்றும் தங்கப்பாண்டி மகன் மனோஜ் குமார் வயது 17 ஆகிய இருவரும் படுகாயம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வினோத்குமார்  மனோஜ் குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றார் தேவதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருக்கின்றனர்.


மேலும் கெங்குவார்பட்டு பகுதியில் இரு வெவ்வேறு தரப்பினையை ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது காவல்துறையினர் குவிப்பு தாக்குதலில் ஈடுபட்ட பத்திற்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


இந்நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இறந்த மற்றும் படுகாயம் அடைந்த நபர்களின் உறவினர்கள் அழுது கதறும் சம்பவத்தால் மருத்துவமனை வட்டாரத்தில் பதட்டம் நிறைவு வருகிறது மேலும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர் உள்ளன


மேலும் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர்  மருத்துவமனையில் பதட்டம் நிலை வருவதால் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad