குள்ளப்புரம் அரசு பள்ளியில் ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் கட்டிடம் : அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 February 2023

குள்ளப்புரம் அரசு பள்ளியில் ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் கட்டிடம் : அடிக்கல் நாட்டு விழா.


தேனி மாவட்டம்,  பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குள்ளப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்  திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் நிதி மதிப்பீட்டில் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுமானப்  பணி  நடைபெறவுள்ளது. இந்த பணிக்காக,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இந்நிலையில், குள்ளப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உதவி திட்ட அலுவலர் மருதப்பன் தலைமையில் அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், துணைத் தலைவர் மருதையம்மாள்  சாஸ்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜயமாலா, ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், ராசு, பாலசுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட பணியாளர்கள், பள்ளி ஆசிரியப் பெருமக்கள்  கலந்து கொண்டனர். நிகழ்வில், கலந்து கொண்ட அனைவருக்கும்  ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். 


நிகழ்வின் நிறைவாக, அனைவருக்கும் ஊராட்சி செயலர் முத்துச்செல்வம் நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment

Post Top Ad