தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய கோவில் அருகில் திருமூலர் தபோவனம் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளன்று பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருநாளை ஒட்டி பெரிய குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 45 ஆவது ஆண்டாக திருமூலர் தபோவணம் பாதயாத்திரை குழுவினர் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.
அரோகரா கோசத்துடன் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடிஎடுத்து பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பாதயாத்திரை சென்றனர், பாதயாத்திரை பக்தர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனையின் படி, அதிமுக நகர்மன்ற குழுத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment