இந்த ஆர்ப்பாட்டத்தில் அல்லிநகரம் பனசல் ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் செயல் இழக்க காரணமான தண்ணீர் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கைஎடுக்கவும், கிராமப்புற மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடம் தங்க நகையில் செம்புக்கும் சேர்த்து பணம் வாங்கி கொள்ளையடிக்கும் மோசடி தங்க நகை கடைகளை மாவட்ட நிர்வாகம்உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்துபொது மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் நகை கடைகளை தடைசெய்யகோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கலந்து கொண்டார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் திருப்பதி, மாவட்ட பொருளாளர் வளர்மதி நாகராஜ், மாவட்ட மகளிர் அணித் தலைவி பிரியா முருகேஸ்வரி, தேனி வடக்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தேனி மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், போடி நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment