தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் ஆயுர்வேத மருத்துவபிரிவை டெல்லி மருத்துவக்குழு ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 February 2023

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் ஆயுர்வேத மருத்துவபிரிவை டெல்லி மருத்துவக்குழு ஆய்வு.


தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிகளின்  மருத்துவமனைகளில் சித்தா, ஆயூர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவப்பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயூர்வேத மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட்டது.
  

இதற்கான கட்டிடப்பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் கட்டப்பட் ஒருங்கிணை ஆயூர்வேத சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தை டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குனர் டாக்டர் ரகு,  இந்திய ஓமியோபதி மருத்துவத்தின் இணை இயக்குனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர். 

3 தளங்களாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஆயூர்வேதம், சித்தா மற்றும் ஓமியோபதி சிகிச்சைக்காக தனித்தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. கட்டிடத்தை ஆய்வு செய்த மருத்துவக்குழுவினர், ஒருங்கிணைந்த ஆயூர்வேத சிகிச்சைப் பிரிவை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். 


இந்த ஆய்வின் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு மிக விரைவில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயூர்வேத சிகிச்சைப்பிரிவு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad