பெரியகுளத்தில் அண்ணா நினைவு நாள் திமுக சார்பில் அமைதி ஊர்வலம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 February 2023

பெரியகுளத்தில் அண்ணா நினைவு நாள் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூன்றாந்தல் காந்தி சிலையிலிருந்து அமைதிப் பேரணி நடைபெற்றது.பேரணி நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நகர் கழகச் செயலாளர் முகமது இலியாஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில்திமுகவினர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் முன்னிலை வகித்தார். 


நிகழ்ச்சியில் வடக்குமாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டி, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாண்டியன், தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டியன், பெரியகுளம் நகர அவைத்தலைவர் வெங்கடாஜலம். நகர துணைச்செயலாளர் மு.சேதுராமன். தாமரை குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி துணை சேர்மன் மலர்கொடி சேதுராமன்,பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ்,துணை சேர்மன் ராதா ராஜேஷ், கவுன்சிலர்கள் சுதா நாகலிங்கம், வைகை சரவணன், கவிதா டென்ஷன், வசந்தா மூக்கையா, தேவராஜ், பிரியங்கா ராஜ்குமார் மற்றும் பேரூராட்சி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட மாநில ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad