இந்நிலையில் இத்தகவல் அறிந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் நேற்று நேரடியாக ஆண்டிபட்டி வந்து பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியரை கண்டித்து அவர்கள் கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர் .
இதைடுத்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து சென்றனர். பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்த சம்பவமும், அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை அலுவலர் ஆய்வும், அரசியல் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டதும் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment