தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய 4 வது வார்டு தற்போது 4,5 வார்டுகளில் இருக்கும் திடீர் நகர் கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் உருவாகிறது. அதாவது உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் மறைந்த மதிப்பிற்குரிய சையது மீரான் என்பவரால் உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலை மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் என்று அப்போதைய நெடுஞ்சாலைத்துறை மக்களின் வீடுகளை இடித்தனர்.
வீட்டை இழந்த மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக மழைக்காலங்களில் மேற்கு பகுதியில் இருந்து உருவாகி வரும் 200அடி ஓடை அரசு பதிவேட்டில் உள்ளது. உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வடமேற்கு பகுதியில் சுமார் 75 குடும்பங்களுக்கு 2சென்ட் வீதம் ஒரு 12அடி பொதுப்பாதை மேற்குல் இருந்து கிழக்கு பக்கமாகவும் 8அடி ஏழு அடி வடக்கு தெற்கு பாதை அளந்து கொடுத்தார். அப்போதைய உத்தமபாளையம் வருவாய்க் கோட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வருவாய்க் கிராமா அதிகாரிகளிடம் அனைவரும் எனது மக்கள், மக்களின் வாழ்விடத்தை இழந்து தவிக்கிறார்கள் அவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சையது மீரான் சேர்மன் அவர்கள் உடனடியாக மக்களுக்கு எண்ணிக்கை.
வரிசையில் டோக்கன் தமிழக அரசால் வழங்கப்பட்டது. அதனை வைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது கழிவு நீர் சாக்கடை கட்டப்பட்டது. மேலும் சிறிய வடிவிலான மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மக்களின் வாழ்விடத்தை உறுதி படுத்தும் விதமாக அரசு பட்டா வழங்க வில்லை மேலும் இப்பகுதியில் இருந்து ஜோசப் நகரை இனைக்கும் விதமாக பாலம் அமைத்து தர வேண்டி பல்வேறு போராட்டம் செய்தனர், இப்பகுதி பொதுமக்கள்.
ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்தது இதில் ஒரு சுவாரஸ்யமாக உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவராக மதிப்பிற்குரிய மறைந்த முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சையது மீரான் அவர்களின் மகன் முகமது அப்துல் காசிம் அவர்கள் பேரூராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்று தலைவராக உள்ளார். தந்தை கொடுத்த இடத்திற்கு மகன் பட்டா வழங்குவார், என எதிர் பார்த்து காத்திருக்கும் திடீர் நகர் பொதுமக்கள் மேலும் கூடுதலாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மருமகன் ஆவார் மக்களின் வீடுகளுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும் எனவும் திடீர் நகர் ஜோசப் நகரை இனைக்கும் இணைப்பு பாலம் அமைத்து கொடுக்க திடீர் நகர் மற்றும் ஜோசப் நகரை சார்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தந்தை செய்த நற்செயலில் தானும் பங்கெடுத்து இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வாரா? உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல் காசிம் அவர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment