தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த க.வீ.முரளிதரன் இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக பணியிட மாற்றம் சென்ற நிலையில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி ஆர்.வி.ஷஜீவனா அவர்கள், (5.2.2023) மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
(6.2.2023) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் குற்றத்திற்கு தலைமையேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அரசு அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment