இதனை தொடர்ந்து மங்கையர்க்கரசியின் கணவர் பெரியசாமி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய பெயரிலும் தன்னுடைய மகன்கள் பெயரிலும் மாற்றி விட்டு தற்பொழுது வயதான காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றி சொத்துக்களை அபக்கரித்தும் விட்டதாக கூறி பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை வயதான காலத்தில் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அனாதையாக விட்டுவிட்ட மருமகன் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் தானமாக கொடுத்த சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் பெயரில் மாற்றியதை ரத்து செய்து மீண்டும் எனக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யம்மாள் மனு கொடுத்துள்ளார்.
அய்யமாலின் மருமகன் பெரியசாமி என்பவர் பெரியகுளம் பகுதியில் விவசாய துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் அவர் மீது துறை வாரியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment