தேவதானப்பட்டியில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 16 February 2023

தேவதானப்பட்டியில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 37 ஏழை பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி, தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார், ஆகியோர் கலந்துகொண்டு ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி ராமையா, துணைச் சேர்மன் நிபந்தன், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், தேனி அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி, தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், தேனி நகர செயலாளர் நாராயணபாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஸ்டாலின்  குணா,  திமுக பேரூர் கழக செயலாளர் திலகர் ராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


அதனைத் தொடர்ந்து, தேவதானப்பட்டியிலிருந்து சில்வார்பட்டி, ஜெயமங்கலம், வைகை அணை, க.விலக்கு அரசு மருத்துவமனை வழித்தடத்தில் தேனி வரையிலான அரசு பேருந்து இயக்குவதை பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர்  கே.எஸ்.சரவணக்குமார் கொடியசைத்து  துவக்கி வைத்தார்.  இதனால், அந்த வழித்தடத்தில் வசித்து வரும் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதேபோன்று பெரியகுளத்தில் இருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad