தேனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் சீமான் உருவபொம்மை எரிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 18 February 2023

தேனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் சீமான் உருவபொம்மை எரிப்பு.


தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ் புலிகள் கட்சியின் சார்பில், அருந்ததியர் மக்களை இழிவாக பேசியதாகநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் சீமானின் உருவ பொம்மையை எரித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தேனி மாவட்ட (கிழக்கு) செயலாளர் அலெக்சாண்டர், தேனி மாவட்டம் மேற்கு செயலாளர் முகமது அலி ஜின்னா, மற்றும் தொகுதி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


பொது மேடையில் தொடர்ந்து அருந்ததியர் மக்களை இழிவாக பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இது  குறித்து உடனடியாக விசாரணையில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துஅழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad