தேனியில் உள்ள பழனிசெட்டிப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீரி வரை வெற்றி நடை பயணத்தை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது இந்த கல்வெட்டினை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா திறந்து வைத்தார்.
தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன் தேனி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையிலும் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார் . அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பழனிசெட்டிப்பட்டியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் காங்கிரஸ் கட்சியின் பெயர் பலகை மற்றும் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் ஒன்றிய கவுன்சிலர் சின்ன பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரின்ஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், தேனி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment