பூட்டிய வீட்டில் திருட்டு; போலீசார் விசாரணை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 March 2023

பூட்டிய வீட்டில் திருட்டு; போலீசார் விசாரணை.


தேனி பாரஸ்ட்ரோடு மூணாவது தெருவில் உள்ள கிங்காங் ஆசாரிக்கு சொந்தமான குடியிருப்பு மேல்பகுதியில் பெரியகுளத்தைசேர்ந்த நாதஸ்வர கலைஞர் சிவகுமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.

இவர் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அடிக்கடி  நாதஸ்வர கச்சேரி சம்பந்தமாக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம், இந்திலையில் சிவக்குமார் வெளியூர் சென்றிருந்ததை பயன்படுத்தி கொள்ளையர்கள் பூட்டி இருந்த சிவகுமாரின் வேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து இரண்டரை பவுன்நகை 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் இது சம்பந்தமாக தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு-ஆய்வாளர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை செய்தார்கள்.


மேலும் இந்த பகுதியில் இதே வீட்டில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து எல்இடி தொலைக்காட்சி மற்றும் இதர பொருள்களை திருடி சென்றிருந்ததை இதே காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதே வீட்டில் தற்பொழுது நகையும் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad