தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 200க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஊராட்சி உறுப்பினர்கள், உதவி வேளாண் அலுவலர் மயில் குமார், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment