தாமரைக்குளம் புதிய அங்கன்வாடி மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - எம்.எல்.ஏ பங்கேற்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

தாமரைக்குளம் புதிய அங்கன்வாடி மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - எம்.எல்.ஏ பங்கேற்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புது காலனி பகுதியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு   நிதியிலிருந்து (2022- 2023) ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் தலைமை தாங்கி  பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார், பேரூராட்சி பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவகி தென்னரசு, கவிதா எடிசன், மாரியம்மாள், வசந்தா மூக்கையா, பாண்டி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அருணாச்சலம், பாஸ்கர அய்யன், கருத்தராசு, ரமேஷ்  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அங்கன்வாடி மையம் அமைய உள்ள அப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் பூமி பூஜை நிகழ்விற்கு வருகை தந்த எம் எல் ஏ சரவணக்குமார் அவர்களிடம் அப்பகுதியைச் சார்ந்த சத்தியராஜ் - ராஜலட்சுமி தம்பதியினர் பிறந்து சில நாட்களே ஆன தங்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்கு அந்த பெண் குழந்தைக்கு "கனிமொழி " என பெயர் சூட்டினார், மேலும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து பூங்கா அமைத்திட தேர்வு செய்யப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad