பெரியகுளத்தில் காங்கிரஸ் கட்சியினர் - அதிமுக எம்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

பெரியகுளத்தில் காங்கிரஸ் கட்சியினர் - அதிமுக எம்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்திய தேசிய காங்கிரஸ்-மகிளா காங்கிரஸ் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும்மத்திய அரசை, கண்டித்தும் மக்கள் பிரச்சனைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பாத அதிமுக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்தை கண்டித்தும், பேரணியாக சென்று கம்பம் சாலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டுமத்திய அரசுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,எம் பி ரவீந்திரநாத்தை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.முன்னதாக வைகை அணைச்சாலையிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருடன்
ஊர்வலமாக வருகை தந்து எம்பி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


முற்றுகைப் போராட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் கலந்து கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார்.


நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சன்னாசி, முனியாண்டி, சிவமணி, கோபிநாத், சின்னபாண்டி, ரசூல், போஸ்,கடல் பிரபு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad