இந்த நிகழ்வில், மாவட்ட ஊர வளர்ச்சி முகம் திட்ட இயக்குனர் மதுமிதா, பெரியகுளம் சார் ஆட்சியர் சிந்து, வட்டாட்சியர் காதர் ஷெரீப், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அண்ணாத்துரை, மாவட்ட ஊராட்சிகள் குழு துணை தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஷ், விஜயமாலா, எண்டப்புளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னபாண்டியன், வருவாய் ஆய்வாளர் செல்வி,கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்,தங்கமுத்து, கற்பகவல்லி, அகிலன், அருள்குமரன், குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் தொடர்பு முகாமில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மருத்துவ காப்பீடு, மருத்துவ பெட்டகம், மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா அவர்கள் வழங்கினார்கள்.மக்கள் தொடர்பு முகாமில் தங்கள்துறை சார்ந்த நிகழ்வுகளை அரசு அலுவலர்கள் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
No comments:
Post a Comment