தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்பெண் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஆபாசமாக பெரியகுளம் வட்டாச்சியர் காதர்ஷெரீப் பேசியதாகவும் அவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்துபணியிட மாறுதல் செய்ய கோரியும், சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும்,நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோரியும்,கூடுதல் பொறுப்புதியும் வழங்க கோரியும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தேனி மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் மதுக் கண்ணன், மாவட்ட துணை தலைவர் காளிதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் மகேந்திரன், பெரியகுளம் வட்ட கிளை தலைவர் சுரேஷ்குமார், மற்றும் அனைத்து வட்ட கிழை பொறுப்பாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமான கலந்து கொண்டு கண்டனகோஷங்களை எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment