தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியராக காதர்செரீப் என்பவர் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர்தேனி மாவட்டம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆய்வின்போது வருவாய்த்துறை அரசு செயலாளர் அவர்களதுதேனி மாவட்ட வருகையின் போது தற்செயல் விடுப்பு கோரிய கிராம நிர்வாக அலுவலர்கள் கற்பகவள்ளி மற்றும் அருள் குமார் ஆகியோர் அவர்களது பணியின் அவசியம் கருதி விடுமுறை அனுமதியை கோட்டாட்சியரிடம்நேரில் சென்று விடுமுறை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதாகவும், இந்நிலையில் பெரியகுளம் வட்டாட்சியர் மீது அவதூறு பரப்பு நோக்கோடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமும் கண்டன பதாகையும் வைக்கப்பட்டதாகவும், முத்தம்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை வட்டாட்சியரை மரியாதை குறைவாகவும் அச்சுறுத்தும் நோக்கோடு பேசியதாக கிராம நிர்வாக அலுவலர் மீது முறைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கோட்டாட்சியர் ஆகியோர்களிடம் உரிய புகார் அளித்து விசாரணையில் இருந்து வரும் நிலையில் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், பணி பாதுகாப்பு வழங்க கோரியும், பெரியகுளம் வட்டாட்சியரை மிரட்டும்நோக்கோடு பதாகை வைத்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட கிளை சார்பில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment