பெரியகுளம் சோத்துப்பாறை அணையை பெரியகுளம் நகராட்சியிடம் ஒப்படைக்க கோரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 March 2023

பெரியகுளம் சோத்துப்பாறை அணையை பெரியகுளம் நகராட்சியிடம் ஒப்படைக்க கோரிக்கை.


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு கடந்த பழமையான நகராட்சியாகும். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து சோத்துப்பாறைக்கு தண்ணீர் கொண்டு வந்து அதனை சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது தமிழக அரசின் உத்தரவின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின் பேரில், கடந்த அக்டோபர் 15 முதல் மார்ச் 15 வரை இடைப்பட்ட காலத்திற்கு விவசாய தண்ணீர் தேவைக்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து 25 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த 21 வருடங்களாக சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதி மற்றும் மதகு பகுதி சீரமைக்கப்படாமல் இருந்தது.அதன் காரணமாக அணையில் இருந்து சேரும் சகதியும் கலந்த தண்ணீர் தேங்கியது.இதனை அடுத்து அணையில் இருந்து சேரும் சகதியுமான தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று முடிந்தது.


பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பேரிஜம் ஏரியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.பேரிஜம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் வந்து சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வரும் சோத்துப்பாறை அணியின் மதகு பழுது நீக்கும்பணி நிறைவடையத்தால், மேலும் மதகு பகுதியில் சேரும் சகதிமற்றும் மரங்கள் கலந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை உடனடியாக சரி செய்யுமாறு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆய்வின்போது தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் போதும் விரைவில் அணையின் மதகு பகுதியை விரைவில் பழுது நீக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இதனை அடுத்து சோத்துப்பாறை அணையில் ஷட்டர் பழுது நீக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணி ஓரிரு தினங்களில் நிறைவடையும் என்றும்,பெரியகுளம் நகராட்சி பொதுமக்களின் நலம் கருதி டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் செய்துள்ளதாகவும், மொத்தம் 30 வார்டுகளிலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சோத்துப்பாறை அனையினை பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுத உள்ளதாகவும் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad