தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வந்த சோத்துப்பாரை அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் வெளியேற்றும் ஷட்டர் பழுதானதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பெரியகுளம் மக்களுக்கு குடிநீர் வழங்கல் நிறுத்தப்பட்டது.
சோத்துப்பாறை அணைக்கு கொடைக்கானல் பேரீச்சம் ஏறிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முறையாக இன்று சோத்துப்பாறை அணைக்கு வந்து சேர்ந்தது
இதனை தொடர்ந்து சரி செய்யப்பட்ட ஷட்டர் மூலமாக தண்ணீர் வெளியேற்றி பெரியகுளம் மக்களின் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது இந்த பணியினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் உடன் சென்று தண்ணீர் வரத்தினை அணை மதகுப்பகுதி சென்று பார்வையிட்டனர்
மேலும் பெரியகுளம் பகுதி குடிநீர் விநியோகத்தை சீராக வழங்குவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக நடைபெற்று வருகிறது
No comments:
Post a Comment