தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள நல்லமுடி பட்டியில் கதிர்வேல் சாமிகள் ஆசிரமத்தில் மண்டல பூஜை விழா நடைபெற்றது, ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 50 ஆண்டு காலமாக இப்பகுதியில் அடிக்கடி நிகழும் ஜாதி மோதல்களை தடுக்கும் விதமாக சமூக நல்லிணக்க பணியாற்றியவரும் , சமூக நீதிக்காக பாடுபட்டவரும், முருக பக்தராய் இருந்து ஆன்மீக சேவையாற்றிய வரும் , பசித்த ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து அவர்கள் கல்வி அறிவுபெற பல்வேறு உதவிகள் செய்தவருமான கதிர்வேல் சாமிகள் மறைந்த நாளின் நினைவை போற்றும் விதமாக விழா நடைபெற்றது.
இவ்விழாவை ஒட்டி முருக பக்தர்கள் கதிர்வேல் சாமிகள் வழிபட்ட முருகன் ஆலயத்தில் அமர்ந்து முருகப்பெருமானின் மூலமந்திரப் பாடல்கள், காயத்ரி மந்திர பாடல்கள், பஜனை பாடல்கள், கிருத்திகை பாடல்கள், தெம்மாங்கு பாடல்கள், ஆகியவற்றை பக்தி பரவசத்துடன் பாடினார்கள். மேலும் கதிர்வேல் சாமிகளின் அடக்க ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இவ்விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட முருகபக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர் ரவி நாகராஜ் சுரேஷ் உள்ளிட்ட முருக பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment