தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் சோத்துப்பாறை அணையில் இருந்து கடந்த சில தினங்களாக பழங்களான குடிநீர் வழங்கப்பட்டதை கண்டித்து அஇ அதிமுகவினர் (எடப்பாடி அணி)கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி நிர்வாகத்தைகண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர் கழக பொறுப்பாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.வழக்கறிஞர்கள் ஜெயராமன், கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் தவமணி, வெங்கடேஷ், கணேஷ், இலக்கியன், ராம்ஜி ரஞ்சித்ராவ், சுரேஷ், பழனிச்சாமி, சென்ராயன் துரைப்பாண்டி ராஜாங்கம், மகளிர் அணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, அமுதா, சுமதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment