தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்த பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமாரை கண்டித்தும், அதிமுக ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம முக நிர்வாகிகள் என ஏராளமானோர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையது கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது, நகர துணை செயலாளர் ஓ.சண்முகசுந்தரம், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக ஓபி எஸ் அணி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment