ஊராட்சி மன்ற தலைவரை எதிர்த்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 March 2023

ஊராட்சி மன்ற தலைவரை எதிர்த்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.


தேனி மாவட்டம் தேனி தாலுகாவிற்கு உட்பட்ட சீலையம்பட்டி ஊராட்சி கிராம எல்கைக்கு உட்பட்ட வேப்பம்பட்டி சாலையில் உள்ள இந்திரா நினைவு குடியிருப்பு காலணியில்  பஞ்சமர் சாரி நிலங்களில் தேவேந்திர வேலாளர் சமூகதினர் மற்றும் பின் தங்கிய வகுப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நபருக்கு மூன்று செண்டு வீதம் அவரவர்கள் பெயருக்கு பத்திர பதிவு செய்து வைத்துள்ள நிலையில் ஒரு சிலர் மட்டும் அவர்களுக்குரிய இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒருசிலர் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி என்பவரிடம் வீட்டு வரி ரசீது பெற்றுள்ள நிலையில் அங்குள்ள மற்ற பொதுமக்களுக்கு வீட்டு வரி ரசீது குடிநீர வசதி மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் காலணி மக்களுக்கு செய்து தராமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக ஆட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தர தொடர்ந்து மறுத்து வருவது சம்மந்தமாகவும் இன்று சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் மற்றம் இளைஞரணி மாவட்ட தலைவர் கார்திக் ஜி ஆகியோர்கள் தலைமையில் இந்திரா நினைவு குடியிருப்பு காலணியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டி சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சஜிவனா அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad