தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திமுக மகளிர் அணியை சேர்ந்தஎண்டப்புளி ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் அமுதேஸ்வரி மற்றும் சமூக ஆர்வலர் எட்வர்ட் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு அருகாமையில் உள்ள-வவ்வால் துறை அணை கட்ட வேண்டும். அடுக்கம் வழியாக அரசு பஸ்கள் கொடைக்கானல் வழியாக செல்ல வேண்டும், வைகை அணை சோத்துப்பாறை, கும்பக்கரை அருவி, மஞ்சளாறு அணை ஆகிய பகுதிகளை மாபெரும் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.
தேனி மாவட்டத்தில் அரசு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என கோரி -தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உருவம் பொறித்த பதாகையுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment