மதுபோதையில் நண்பர்களுக்குள்ளாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை பெரியகுளத்தில் பரபரப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 April 2023

மதுபோதையில் நண்பர்களுக்குள்ளாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை பெரியகுளத்தில் பரபரப்பு.


தேனி மாவட்டம் பெரியகுளம்  அழகர்சாமி புரம் பகுதியில் குடியிருந்து வருபவர் 26 வயதுள்ள பாண்டி மகன் விஜயராஜ் இவரும் சூர்யா .ரஞ்சித். அருண் இவர்கள் மூன்று பேரும் விஜயராஜ்-ன் நண்பர்கள் ஆவார்கள் நான்கு பேரும் ஊருக்கு அருகில் உள்ள மலையக்காரர் தென்னந்தோப்பில் ஒன்று கூடி அவ்வப்போது மது மற்றும் கஞ்சா ஆகியவற்றை அருந்திவிட்டு அவர்களுக்குள்ளாகவே வாக்குவாதம் செய்வது தொடர்ந்து நடைபெறுவதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் விஜயராஜ், சூர்யா, ரஞ்சித், அருண் ஆகியோர் வழக்கம் போல் சந்தித்து  தென்னந்தோப்பில் மது அருந்திவிட்டு இருக்கும் பொழுது நான்கு பேருக்குள்ளாக வாக்குவாதம் ஏற்பட்டு விஜயராஜ்-ஐ கத்தியால் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டதாக தெரிகிறது சம்பவத்தை கேள்விப்பட்ட பெரியகுளம் காவல்துறையினர் விரைவாக சென்று விஜயராஜின் பிணத்தை கைப்பற்றி கொலையாளிகளான சூர்யா, ரஞ்சித், அருண் ஆகியோரை தேடி வந்தனர் இந்நிலையில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் திருமதி. மீனாட்சி கொலையாளிகளான அருண் - சூர்யா ஆகியோரை விரைந்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றார்கள் மேலும் தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.


நண்பர்களுக்குள்ளாக ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்ததால் பெரியகுளம் பகுதியில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது மேலும் விஜயராஜின் குடும்பத்தார்கள் கொலை செய்த அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என கூறி வருகின்றனர், கொலையான விஜயராஜ்மற்றும் கொலை செய்த சூர்யா ரஞ்சித் .அருண் ஆகியோர் மீது  பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad