வடகரை நெல்லையப்பர் நடுநிலை பள்ளிசோனைமுத்து பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டஇந்த பள்ளி அரசு உதவியோடு செயல்பட்டு பல சிறந்த மாணவர்களை உருவாக்கி உள்ளது, இந்த பள்ளி பாரம்பரியம்மிக்க பள்ளி என்பதால் இந்த பள்ளியில் 70-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவின் பொழுது பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி பேச்சுப்போட்டி கவிதை போட்டி மாறுவேட போட்டி ஆகியவை நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் மணிகார்த்திக் பரிசுகளை வழங்கி பாராற்று சான்றுகளை கொடுத்தார்.
விழாவிற்கான நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் சோ .முத்துமாணிக்கம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சோ. பாலு ஆகியோர் செய்து இருந்தனர் விழாவிற்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பள்ளியின் சிறப்பு ஆசிரியர்களுடைய உழைப்பு மாணவர்களுடைய கலை நிகழ்ச்சி மற்றும் ஆர்வமுடன் பயிலும் முறை ஆகியவற்றை பெரிதும் பாராட்டி விளகிப் பேசினார்கள்.
ஏராளமான மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் .ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment