பெரியகுளம் GCCI சினாடு மற்றும் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் அவசரக்கூட்டம் பெரிய குளத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தேனி மாவட்ட பேராயரும் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு. ரூபன் சரவணகுமார் தலைமையில் அழகர்சாமி புரம் மீட்பின் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் திரு. மாறன் அவர்களும் தென் மண்டல போதகர் அணி செயலாளர் திரு. அந்திரேயா அவர்களும் தேனி மாவட்ட செயலாளர் திரு. டாக்டர் லாசர் மற்றும் கட்சியின் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் இருதயராஜ் கட்சியின் கீழ வடகரை மகளிர் அணி செயலாளர் திருமதி வேலம்மாள் மற்றும் துணை செயலாளர் திருமதி. விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில ஆலோசகரும் வழிகாட்டியுமான திரு. சண்முகசுந்தரம் என்ற பெரிய குட்டியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment